Tuesday, January 12, 2016

கட்டுரை - பாரதியார் (25 வரிகளில்)

பாரதியார்

'எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி!'
என்று கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்பே முழங்கியவன் தான் எங்கள் பாரதி..

இயற்பெயர் சுப்ரமணியன் என்றாலும் 'பாரதி' என்னும் பட்டத்தைத் தனது பதினோராம் வயதிலே தனது கவித்திறமையால், எட்டையபுர மகாராஜாவிடம் பெற்றவன் எங்கள் பாரதி...

'நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் ' என்ற தனது வாக்கிற்கேற்ப இறுதி வரை நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் கவிதை புனைந்தவன் எங்கள் பாரதி...

நாற்பது வயது வரை கூட வாழாத, நரைப்பருவம் எய்தாத, ஆனாலும் இதோ இன்று வரை எல்லாக் கவிஞர்களுக்கும் மகாகவியாய் வாழ்ந்து கொண்டிருப்பவன் எங்கள் பாரதி...

குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, சுதந்திரப்பாடல்கள், தெய்வீகப்பாடல்கள், ஞானப்பாடல்கள் இவ்வளவு ஏன்  குழந்தைகளுக்காக‍க் கூட பாப்பா பாடல்கள்  பாடினவன் எங்கள் பாரதி...

எத்தனை கவிஞர்கள் வந்த போதிலும்  எத்தனை பாடல்கள் வந்த போதிலும் , உலகின் ஏதாவது ஓர் தமிழ் மன்றத்திலும் எங்காவது ஓர் தமிழறிஞர் கூட்டத்தில் பாரதி என்னும் பெயரும் அவனது பாடல்களும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.... இதை விட பெருமை வேறென்ன வேண்டும்? பாரதி எங்கள் பாரதி.....



 

No comments:

Post a Comment