பண்டைய தமிழ்நாடு கண்ட பல்வேறு பெண்கவிஞர்களில் ஔவைப் பாட்டிக்கே முதல் இடமுண்டு.. அவருடைய வாழ்க்கையை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இறையோடு கூடிய வாழ்க்கை மற்றும் தமிழோடு கூடிய வாழ்க்கை. இறைத்தன்மை கொண்டவர் என்பதற்கு அவருடைய இளமைப்பருவ வாழ்க்கையைப் பற்றி நாம் அறிந்து கொண்டாலே போதும்.. விநாயகர் மீது அவர் கொண்ட பக்தியின் காரணமாக முதுமைப் பருவத்தை வரமாகக் கேட்டு இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தை அடைந்து விட்டார் என்ற புராணக்கதை ஒன்றுண்டு
சில அறிஞர் பெருமக்கள் ஔவை என்பவர் ஒருவர் அல்ல. வயதான பெண்களை அழைக்கும் ஒரு சொல்தான் ஔவை என்பதால் இன்று நம்மிடையே இருக்கும் பாடல்கள் ஒருவரால் எழுதப்பட்டவையாக இருக்காது.. பல பெண்கவிஞர்கள் பல்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பே என்றும் கூறுவதுண்டு.
எது எங்ஙனம் இருந்தாலும், ஔவைப் பாட்டி தம் பாடல்கள் மூலம் வந்த கருத்துகளை நாம் கசடறக் கற்று புரிந்து கொண்டாலே போதும். ஔவைப் பாட்டி குழந்தைகளுக்காகவே நிறைய பாடல்கள் எழுதியது போலத் தோன்றினாலும் அவர் சொல்லும் அறவுரைகள் குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல. எத்துணை வயதினர் என்றாலும் வாழ்வின் இறுதிவரை கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஆகும்..
ஆத்திசூடி என்பது ஒரு வரியில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்.... ஆத்திசூடி என்பது அத்தி மரத்தின் பூவைத் தன் தலையில் சூடியிருக்கக் கூடிய எல்லாம் வல்ல இறைவனைக் குறிக்கிறது ...
இதனைத் தவிர மூதுரை மற்றும் கொன்றை வேந்தன் என்னும் பாடல்களையும் இயற்றியுள்ளார்.
No comments:
Post a Comment